Show all

தளபதி 63 தீபாவளிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது! தமிழகம் பொங்கல் கொண்டாட்டத்தில் திளைத்து வரும் இந்த வேளையில்

03,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஒருபக்கம் பொங்கல் படங்களான 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' திரைப்படங்கள் பொங்கலைச் சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில், இன்னொரு பக்கம் 'தளபதி 63' படத்தின் தரவேற்றங்கள் அன்றாடம்; வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தப் படத்தில், பரியேறும் பெருமாள் கதிர், யோகிபாபு மற்றும் ரோபோ சங்கரின் மகள் ஆகியோர் இணைந்த செய்தி அண்;மையில் இணையதளங்களில் தீயானது. இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் புதிய தரவேற்றம் படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வெளிவந்துள்ளது. அதாவது இந்த படத்தில் தற்போது நடிகர் விவேக் இணைந்துள்ளார். 

இந்தப் படத்தில் யோகிபாபு, விவேக் ஆகிய இரண்டு முன்னணி நகைச்சுவை நடிகர்கள் இருப்பதால் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே கருதப்படுகிறது. விஜய், நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் இந்த படம் வரும் தீபாவளி நாளில் வெளியாகவுள்ளதாம். 

பாஜக, அதிமுக ஏதும் வம்பு பண்ணாமல் பார்த்துக் கொள்ளுங்கள் தளபதி 63 படக்குழுவினர்களே.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,035.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.