Show all

சர்கார் படத்தை சில மணி நேரத்திலேயே கசியவிட்டது தமிழ் ராக்கர்ஸ்! ஆனால்.. சாதாரண திரையரங்க எளிய பதிப்பு

20,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகர் விஜய் நடிப்பில் இன்று வெளியான சர்கார் படத்தை சில மணி நேரத்திலேயே கசியவிட்டது தமிழ் ராக்கர்ஸ். இதனால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து நடிகர் விஜய் நடித்திருக்கும் சர்கார் படம் தீபாவளி நாளான இன்று வெளியானது. தமிழ் ராக்கர்ஸ் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இணைத்தளப் பக்கம் ஒன்று சர்கார் படத்தை வெளியீட்டு நாளன்றே  உயர்தரப் பதிப்பில் வெளியிடுவோம் என்று குறிப்பிட்டிருந்தது.

இந்தப் பதிவையடுத்து, சர்கார் படம் இணையத்தில் வெளியாகாமல் இருக்க படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறங்கூற்றுமன்றத்தை நாடியது. அதன் விசாரணையில் சர்கார் படம் இணையத்தில் வெளியிட தடை விதித்தது சென்னை உயர்அறங்கூற்றுமன்றம். மேலும், தயாரிப்பாளர் சங்கம் மூலமாகவும் அதிரடியாக சிறப்பு கண்காணிப்பு ஏற்பாட்டில் ஈடுபட்டிருந்தது படக்குழு. 

இவர்கள் மட்டுமின்றி விஜய்யின் ரசிகர்கள் அனைவரும் சமூகவலைத்தளத்தில் இப்படத்தை இணையத்தில் கசிய விட வேண்டாம் என்று தமிழ்க்களவாணிகளுக்கு வேண்டுகோள் விடுத்தும் பயன் இல்லாமல் போனது.
ஆனால் ஒரு ஆறுதல் என்னவென்றால், தமிழ்க்களவாணிகளால் கசிய விடப்பட்டதாகச் சொல்லப்படும் சர்கார் உயர்தரப் பதிப்பு அன்று. திரையரங்கில் பதிவு செய்யப் பட்ட சாதாரண பதிப்பே என்று சொல்லப் படுகிறது.  

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,963.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.