Show all

காணிக்கையாகப் பெறப்பட்ட வெளிநாட்டு நாணயங்கள், இந்திய ரூபாய்களாக மாற்றப்படாமலேயே...

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வெளிநாட்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் நாணயங்கள் மற்றும் டாலர்கள் இதுவரை நமது இந்திய ரூபாய்களாக மாற்றப்படாமலேயே உள்ளது. இதனால் அவற்றை எண்ணமுடியாத சூழல் உருவாகி உள்ளது.

இது குறித்து தேவஸ்தான பரகாமணி உதவி அதிகாரி வரலட்சுமி, உலக பிரசித்தி பெற்ற திருப்பதி கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் தங்கம், வௌ;ளி ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். அவற்றில் 1300 முதல் 1600 கிலோ வரை தங்க நகைகள் தற்போது இருப்பில் உள்ளன. இதில் 1300 கிலோ தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

ஏழுமலையானுக்கு மாதந்தோறும் 30 முதல் 40 கிலோ வரை தங்க நகைகளைப் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இதில் 100 முதல் 150 தங்கத் தாலிகளைப் பெண்கள் மாதந்தோறும் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். மாதத்தில் சுமார் 75 கிலோ வௌ;ளியில் காணிக்கையாக வருகிறது.

எனினும் காணிக்கையாகப் பெறப்பட்ட வெளிநாட்டு நாணயங்கள், டாலர்கள் இதுவரை நமது இந்திய ரூபாய்களாக மாற்றப்படாமலேயே உள்ளது. இவை 60 முதல் 70 டன் வரை தேங்கி உள்ளன. மேலும் உண்டியலில் செலுத்தப்படும் 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய் காசுகளும் எண்ணப்படாமல் மூட்டை மூட்டையாக கிடங்குகளில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.