Show all

பூஸான் திரைப்பட விழாவில் தமிழ்ப்படம் ரேடியோபெட்டிக்கு, சிறந்த படத்துக்கான ரசிகர்கள்விருது.

பூஸான் திரைப்பட விழாவில் பங்கேற்ற தமிழ்ப் படமான, ரேடியோ பெட்டி சிறந்த படத்துக்கான ரசிகர்கள் விருதைப் பெற்றுள்ளது.

ஹரி விஸ்வநாத் இயக்கியுள்ள படம், ரேடியோ பெட்டி. வானொலி கேட்கும் பழக்கம்கொண்ட முதியவரைப் பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. சரியாகக் காது கேட்காத ஒரு முதியவர் பழைய வானொலியைச் சத்தமாக வைத்துக் கேட்கிறார். அதனால் வீட்டில் ஏற்படும் பிரச்சனைகள்தான் இந்தப் படத்தின் கதை.

தென் கொரியாவின் பிரபலமான பூசான் திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வு ஆனது ரேடியோ பெட்டி.

இதுவே ஒரு சாதனையாகக் கருதப்பட்டது. ஆனால் இப்போது ரேடியோ பெட்டி, பூசான் திரைப்பட விழாவின் சிறந்தப் படத்துக்கான ரசிகர்கள் விருதைப் பெற்றுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.