Show all

ஆசிய கூடைப்பந்துப் போட்டி: காலிறுதியல் இந்திய அணி

சீனாவில் நடைபெற்று வரும் 28ஆவது எஃப்ஐபிஏ ஆசிய கூடைப்பந்துப் போட்டியில் காலிறுதி ஆட்டத்துக்கு இந்திய அணி முன்னேறியது.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை பிலிப்பின்ஸýக்கு எதிரான போட்டியில் 99-65 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய கூடைப்பந்து அணி தோல்வியுற்றது. எனினும், அன்றைய ஆட்டத்தையும் சேர்த்து மொத்தம் 3-இல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளதால் இந்திய அணி காலிறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது.

இதுகுறித்து, அணியின் முன்னணி வீரர் யத்வீந்தர் கூறுகையில், "இதற்காக அனைத்து வீரர்களும் கடுமையாக முயற்சித்துள்ளோம். முந்தைய அணிகளை விட நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம்.

அம்ஜோத் சிங், அம்ரித்பால் சிங் ஆகியோர் தங்களது ஆட்டங்களை மேம்படுத்திக் கொண்டதே இந்த வேறுபாட்டுக்கு காரணமாகும்' என்றார்.

முன்னதாக, பிலிப்பின்ஸýக்கு எதிரான ஆட்டத்தின் முதலில் 17-16 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது. எனினும், ஆட்டத்தின் பாதி நேரத்திலேயே 42-36 என்ற கணக்கில் பிலிப்பின்ஸ் முன்னிலை பெற்றது.

இந்திய அணியின் சார்பில், கேப்டன் விஷேஷ் பிரிகுவன்ஷி 21 புள்ளிகள் பெற்றார். அம்ரித்பால் 18 புள்ளிகளும், அம்ஜோத் 11 புள்ளிகளும் பெற்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.