Show all

தமன்னாவுக்கு தமிழ்ப்பையன் மாப்பிள்ளையாக வேண்டுமாம்!

06,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி, தமன்னா நடித்துள்ள கண்ணே கலைமானே படம் வரும் கிழமை வெளியாக இருக்கிறது. படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக சென்னை வந்துள்ள தமன்னா அளித்த பேட்டி: 

இதில் பாரதி என்னும் வங்கி அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். படத்தின் கதையை கேட்ட உடனே உதயநிதியிடம் நீங்கள் இதில் நடிக்கிறீர்களா? என்று வியப்பாகக் கேட்டேன். காரணம் படத்தில் அவருக்கு இணையாக எனக்கும், வடிவுக்கரசி அம்மாவுக்கும் முதன்மைத்துவம் இருக்கும். 

இது ஒரு காதல் கதை. படம் பார்த்தேன். படத்தில் எந்த காட்சியிலுமே உதயநிதியும் தமன்னாவும் தெரியவில்லை. கமலக்கண்ணனும் பாரதியும்தான் தெரிந்தார்கள். சில காட்சிகளில் நான் அழுதுவிட்டேன். படத்திற்குள் சின்ன சின்ன அரசியலும் இருக்கிறது. உலகின் எந்த மொழியிலும் மொழிபெயர்ப்பு இல்லாமலேயே இந்தப் படத்தை புரிந்துகொள்வார்கள்.

அவரை பார்க்கும்போது பொறாமையாக இருக்கும். எது நடந்தாலும் பார்ப்பதற்கு அப்பாவியாகவே தெரிவார். ஒரு காட்சியில் சிறப்பாக நடித்ததற்காக இயக்குனர் அல்வா கொடுத்தார். அந்த திருநெல்வேலி அல்வா எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. எனக்கு அதுவே மிகப்பெரிய பரிசு. 

அல்வா என்றதும் வேறு பொருள் எடுத்துக்கொள்ள வேண்டாம். பாராட்டும்போது இனிப்பு கொடுக்கவேண்டும் என்பதற்காக கொடுத்தது. சீனு அவர்கள் படத்தில் நடிக்கும்போதுதான் ஒரு சாதாரண குடும்ப பெண்ணுக்கு இருக்கும் பலங்கள் புரிகிறது. தர்மதுரையிலேயே அதை உணர்ந்தேன். ஆனால் பாரதி மிகவும் வித்தியாசமானவள்.

இதிலும் கவர்ச்சி இருக்கிறது. கவர்ச்சி என்றால் எல்லோரும் நினைப்பது போன்ற உடல் கவர்ச்சி அல்ல. முகத்தில் தெரியும் நடிப்பு உணர்ச்சியே கவர்ச்சி. எனது வேடம் மிகவும் இயல்பாக இருக்கும்.

தமன்னாவின் தமிழ் ஒலிப்பு தெளிவாக இருந்தது. தமிழ்ப் பையனாகப் பார்த்து திருமணம் செய்து கொள்ள ஆசையாம். 'சீனு அவர்களிடம் பார்க்க சொல்லி இருக்கிறேன். தமிழ்நாட்டு மாப்பிள்ளைக்காக காத்திருக்கிறேன்.' என்கிறார் தமன்னா.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,067.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.