Show all

இலக்கு அளவீட்டு புள்ளிகள் (டிஆர்பி) என்றால் என்ன தெரியுமா!

கார்ப்பரேட் தொலைக்காட்சி கண்மடைகளின் வருமானத்தை பெருக்கும் காரணியாக இருக்கும் இலக்கு அளவீட்டு புள்ளிகள் (டிஆர்பி) என்றால் என்ன தெரியுமா!

22கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தொலைக்காட்சி கண்மடை (சேனல்) மற்றும் அந்தக் கண்மடையில்  ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் தரத்தினை நிர்ணயிக்கும் கருவியாக கருதப்படுவது, இலக்கு அளவீட்டு புள்ளிகள் (டிஆர்பி) ஆகும்.

தொலைக்காட்சி கண்மடை (சேனல்) தரத்தினை நிர்ணயிக்கும் கருவியாக கருதப்படும் இலக்கு அளவீட்டு புள்ளிகள் (டிஆர்பி) என்றால் என்ன தெரியுமா? குறிப்பிட்ட ஒரு தொலைக்காட்சி கண்மடை (சேனல்) பெற்றிடும் அளவீட்டு புள்ளிகள் ஆகும். அதாவது, மொத்த பார்வையாளர்களுள் எத்தனை பார்வையாளர்கள் அந்தக் குறிப்பிட்ட தொலைக்காட்சி கண்மடைக் காட்சியைப் பார்க்கிறார்கள் என்பதன் மதிப்பீட்டு அளவாகும். 

குறிப்பிட்ட தொலைக்காட்சி கண்மடை ஒன்றில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி அல்லது தொடரினை பார்த்து மகிழ்ந்த பார்வையாளர்களின் எண்ணிக்கையே அந்த தொலைக்காட்சி கண்மடையின் மதிப்பீட்டுப் புள்ளிகளாக கணக்கிடப்படுகிறது. 

இந்த அளவீடானது பொதுவாக இரண்டு வகைகளில் மேற்கொள்ளப் படுகிறது. ஒருவகை: குறிப்பிட்ட அளவிளான வீடுகளில் உள்ள தொலைக்காட்சிகளில் சிறப்புக் கருவியினை பொருத்தி, தொடர்ச்சியாக கண்காணித்து அளவிடப்படுவது. நிகழ் நேரத்தில் குறிப்பிட்ட கண்மடையை எத்தனை நபர்கள் பார்க்கின்றனர் என்பதனை அடிப்படையாக கொண்டு இந்த வகை அளவீடு மேற்கொள்ளப் படுகிறது.

மற்றொரு வகை: குறிப்பிட்ட அளவிளான வீடுகளில் உள்ள தொலைக்காட்சி பெட்டிகளில் சிறப்புக் கருவிகளைப் பொருத்தி, குறிப்பிட்ட கால இடைவெளியில் புகைப்படங்கள் எடுத்து, இந்த புகைப்படங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் எந்த கண்மடைக்கு அதிகமாக மகிழ்நர்கள் இருக்கின்றனர் என அளவிடப்படும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,360.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.