Show all

சூர்யாவின் ஊண்புலவை சுவைத்து கொண்டாடிய காப்பான் படக்குழு! காப்பான் படம் விடுதலை நாள் வெளியீடாம்

09,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் காப்பான் படத்தில் நடித்து வரும் சூர்யா, படக்குழுவினருக்கு ஊண்புலவு விருந்து அளித்துள்ளார். 

சூர்யா-கே.வி.ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் காப்பான் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், மோகன்லால் சம்பந்தப்பட்ட காட்சிகள் நேற்று முடிந்தததாக படக்குழு அறிவித்தது.

இந்த நிலையில், மொத்த படக்குழுவினருக்கும் நடிகர் சூர்யா இன்று ஊண்புலவு விருந்து அளித்தார். காப்பான் படக்குழுவுக்கு சூர்யா ஊண்புலவு பரிமாறும் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாகி வருகிறது.

தற்போது கிழக்கு கடற்கரை சாலையில் பாடல் காட்சியை படக்குழு படமாக்கி வருவதாகவும், அடுத்ததாக அமெரிக்கா சென்று அங்கு ஒரு பாடலை படமாக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மோகன்லால் இந்த படத்தில் தலைமை அமைச்சராக நடிக்கிறார். தலைமை அமைச்சரைப் பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். சூர்யாவுக்கு கதைத்தலைவியாக, சாயிசா சய்கலும், முதன்மை கதாபாத்திரங்களில் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். 

லைகா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். படத்தை விடுதலை நாளை முன்னிட்டு வெளியீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,070.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.