Show all

ரூ.350 மதிப்புள்ள ஒரு சீன செல்பேசியைக் கொடுத்து ஏமாற்ற பார்க்கிறார் ஜெயலலிதா

ரூ.350 மதிப்புள்ள சீன செல்போனை கொடுத்து மக்களை ஏமாற்ற பார்க்கிறார் ஜெயலலிதா என்று  நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு கூறியுள்ளார்.

 

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

அ.தி.மு.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை, மிகப்பெரிய ஜோக் மாதிரி இருக்கிறது. மக்களுக்கு இலவசங்களைக் கொடுத்து ஏமாற்றுவது போல அந்த அறிக்கை உள்ளது.

 

கடந்த 5 ஆண்டுகளாக ஜெயலலிதா தூங்கி விட்டு இப்போது தான் விழித்து கொண்டது போல தெரிகிறது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென அவர் நினைத்திருந்தால் முதல்வராக பொறுப்பேற்றவுடனே செய்திருக்கலாம்.

 

ஆனால் அதையெல்லாம் செய்யாமல் தேர்தல் சமயத்தில் இலவசங்கள் என்ற வாக்குறுதியை கொடுத்து அனைவரையும் கவர்ந்து விடலாம் என நினைக்கிறார்.

தி.மு.க. - காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மக்களின் நலனுக்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது.

 

கருத்து கணிப்புகளில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வெற்றி அமோகமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அதனால் ஜெயலலிதாவுக்கும், அ.தி.மு.க.வினருக்கும் தோல்வி பயம் வந்துவிட்டது.

 

அனைவருக்கும் செல்போன் வழங்குவதாக அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. ரூ.350 மதிப்புள்ள ஒரு சீன செல்போனை ஜெயலலிதா கொடுத்து ஏமாற்ற பார்க்கிறார். இவ்வாறு கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.