Show all

பிடல் காஸ்ட்ரோவை போப் பிரான்சிஸ் சந்தித்து பேசினார்.

போப் ஆண்டவர் பிரான்சிஸ் 4 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 19-ந்தேதி கியூபா சென்றார். அங்கு அரசுக்கும், கத்தோலிக்க திருச்சபைக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து, அந்நாட்டு தலைவர்களுடன் போப் பேச்சு நடத்தினார்.

கியூபாவின் முன்னாள் அதிபரும், பழம்பெரும் கம்யூனிசவாதியுமான பிடல் காஸ்ட்ரோவை போப் பிரான்சிஸ்  சந்தித்து பேசினார். அப்போது உலக அரசியல் நிலவரங்கள், மத விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசினர்.

இந்தச் சந்திப்பின் போது காஸ்ட்ரோவுக்கு 70 ஆண்டுகளுக்கு முன் பாடம் நடத்திய பாதிரியார் எழுதிய புத்தகங்கள், சி.டி.க்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை போப் ஆண்டவர் வழங்கினார். இதைத்தொடர்ந்து அதிபர் மாளிகைக்குச் சென்ற போப்,

அதிபரும், பிடல் காஸ்ட்ரோவின் தம்பியுமான ரவுல் காஸ்ட்ரோவை சந்தித்து பேசினார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.