Show all

எம்.ஆர்.ராதாவாக சிம்பு நடிக்கவிருக்கிறாராம்! எம்.ஆர்.ராதா வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஆகிறது

தமிழின் பழம்பெரும் நடிகரரான எம்.ஆர். ராதாவின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தில் சிம்பு எம்.ஆர்.ராதாவாகவும், அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர். ஆகவும் நடிக்க இருப்பதாக செய்திகள் உலாவர தொடங்கி, அருமை அருமை என்று பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

 

11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடிகையர் திலகம் வாழ்க்கை வரலாற்றைத் தொடர்ந்து, தமிழக முன்னாள் முதல்வர் செயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இரண்டு பேர் படமாகவும் ஒருவர் இணையத் தொடராகவும் எடுத்து வருகின்றனர். 
தற்போது பிரபலமானவர்களின் வாழ்க்கை வரலாறுகள் திரைபடங்களாக உருவாகத் தொடங்கியுள்ளன. அந்த வரிசையில் பழம்பெரும் நடிகரான எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாற்றை அவரது மகளான ராதிகா சரத்குமார் தயாரிக்க இருக்கிறார். 
இந்தப் படத்தில் எம்.ஆர்.ராதாவாக நடிக்க சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை எம்.ஆர்.ராதாவின் பேரனான ஐகி இயக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே சங்கிலி புங்கிலி கதவ தொற எனும் படத்தை இயக்கியுள்ளார். மேலும் படத்தில் எம்.ஜி.ஆராக நடிக்க அரவிந்த்சாமியிடமும் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகக் கூறப்படுகிறது.
அருமையான தேர்வாக இருக்கிறதே! எம்.ஆர்.ராதாவாக நடிக்க சிம்பு, எம்.ஜி.ஆராக நடிக்க அரவிந்த்சாமி அருமை அருமை என்று பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,132.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.