Show all

சின்னத்திரை பாணியில், லைகா நிறுவனத்தின், இவருக்குப் பதிலாக இவர்! ஆம் இந்தியன் 2 படத்தில் சிம்புவுக்குப் பதிலாக சித்தார்த்

01,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வந்தா ராஜாவாத்தான் வருவேன் சம்பள விவகாரம் தொடர்பாக நடந்த பஞ்சாயத்தைத் தொடர்ந்து இந்தியன் 2 படத்திலிருந்து சிம்பு அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

சங்கர் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான இந்தியன் படத்தைத் தொடர்ந்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் 2 படம் உருவாகிறது. காஜல் அகர்வால் இப்படத்தில் கமலுக்கு கதைத்தலைவியாக நடிக்கிறார். லைகா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தில் முதன்மை வேடத்தில் சிம்பு நடிப்பதாக செய்தி வெளியாகியது. கமலுக்கு பேரனாக சிம்பு நடிப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், லைகா தயாரிப்பில் உருவாகியுள்ள வந்தா ராஜாவாத்தான் வருவேன் படத்துக்கு சிம்பு சரியான ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இயக்குனர் சங்கரிடம் சிம்பு இப்படத்தில் நடிக்க வேண்டாம் என்று லைகா நிறுவனம் கூறியதாகவும், அதற்கு சங்கர் யோசிக்காமல் சரி சொன்னதாகவும் கூறப்படுகிறது.

சிம்புவிற்குப் பதிலாக அந்த வேடத்தில் சித்தார்த் நடிக்க இருப்பதாகவும் படக்குழுவினர் சித்தார்த்தை ஒப்பந்தம் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் வெள்ளிக் கிழமை தொடங்கயிருக்கிறது. இதற்காக கமல் முதல் கட்ட படப்பிடிப்பிற்காக 50 நாட்கள் பங்குபெறலுக்கு ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,033.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.