Show all

தன் சாதியைத் தேடியவர்களை சாடினார்! ரித்விகா கொஞ்சம் கடுமையாகவே

14,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பரதேசி படம் மூலம் நடிகையானவர் ரித்விகா. வளர்ந்து வரும் நடிகையான அவர் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். பிக் பாஸ் 2 தலைப்பை வென்றார். 

இந்நிலையில் பலரும் ரித்விகாவின் சாதியை தெரிந்து கொள்ள கூகுளில் தேடியுள்ளனர். அதில் சிலர் ரித்விகா ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால் தான் அவருக்கு பிக் பாஸ் 2 தலைப்பு கிடைத்ததாகவும் பேச்சை கிளம்பியுள்ளார்கள். இது ரித்விகாவுக்கு தெரிய வரவே அவர் கீச்சுப் பக்தத்தில் கடுமையாக கோவித்துள்ளார். 

நான் அந்த சாதியும் இல்லை, இந்த சாதியும் இல்லை. நான் எந்த சாதி என்று உங்கள் சாதி சாக்கடையில் தேடி கண்டுபுடிச்சுக்கோங்கடா என்று கீச்சுப் பதிவிட்டுள்ளார். 

பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது தமிழ் பொண்ணு என்றவர், தற்போது சாதி பற்றி பேசும் போது கோபப் படுவதால், தமிழ் ஆர்வலர்களும், சாதிய மறுப்பாளர்களும் ரித்விகா மீது தனிப் பாசத்தை பொழிகிறார்கள். ரித்விகா சேலம் பகுதியைச் சார்ந்தவர் என்பதாலும், அவருடைய தந்தை பற்றவைப்பாளராக பணியாற்றிய தொழிலாளி என்பதாலும், இயல்பிலேயே ரித்விகாவிற்கு முற்போக்கு சிந்தனை அதிகம் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. 

தொடர்ந்து முற்போக்கு சிந்தனையுள்ளவராகவும், தான் தமிழச்சி என்கிற பெருமிதம் கொண்டவராகவும், ரித்விகா தொடர்ந்து இருப்பாரேயானால், தமிழகத்தில் அவருக்கான எதிர்காலம் ஒளிமயமானதே.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்;ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,987.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.