Show all

சமுத்திரக்கனி, அமலா பால், ரேவதி போன்றோர் நடிக்கும் அம்மா கணக்கு

சென்ற ஆண்டு காக்கா முட்டை படத்தைத் தயாரித்த தனுஷ், இந்த ஆண்டு பெண் இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரியின் படத்தைத் தயாரிக்கிறார்.

அம்மா கணக்கு என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. சமுத்திரக்கனி, அமலா பால், ரேவதி போன்றோர் நடிக்கும் இப்படத்தை தனுஷின் வொண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது.

அஸ்வினி, இதற்கு முன்பு Nil Battey Sannata என்கிற படத்தை இயக்கியுள்ளார். இது பல சர்வதேசப் பட விழாக்களில் விருதைப் பெற்றுள்ளது. அந்தப் படம்தான் தற்போது அம்மா கணக்கு என்கிற பெயரில் உருவாகிறது. தன்னந்தனியாக தன் மகளை வளர்க்கும் ஒரு தாயின் கதைதான் அம்மா கணக்கு. அம்மாவாக ரேவதியும் மகளாக அமலா பாலும் நடிக்கிறார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.