Show all

கறுப்பு பணம் வைத்திருப்போரை நிம்மதியாக தூங்க விடக் கூடாது; எச்சரிக்கிறார் மோடி

கறுப்பு பணம் வைத்திருப்போர் நிம்மதியாக தூங்க வேண்டுமானால், அதுகுறித்து, செப்டம்பர், 30க்குள் வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும், என, பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார். தலைநகர் டில்லியில் நேற்று, நகை வர்த்தகர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற, மோடி பேசியதாவது: கறுப்புப்பண சுமையை, நம் முதுகில் சுமக்க வேண்டிய அவசியம் என்ன? வருமான வரித்துறைஅதிகாரிகள் நம் வீட்டில் சோதனையிடுவர் என்ற அச்சத்துடன் ஏன் இருக்க வேண்டும்? கறுப்புப்பணம் வைத்திருப்போர், நிம்மதியாக தூங்க வேண்டுமானால், வரும் செப்., 30க்குள், அதுகுறித்து, வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும். கறுப்புப்பணம் வைத்திருப்போர் பற்றிய தகவல் யாருக்காவது தெரிந்தால், அதுபற்றி, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தெரிவியுங்கள்; இதன் மூலம் நாட்டுக்கு உதவி செய்யுங்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.