Show all

எஸ்கே 13 என்ற பெயரில் அடையாளப்படுத்தப் பட்டு வந்த படம் தற்போது மிஸ்டர் லோக்கல் என தலைப்பு சூட்டப் பட்டுள்ளது

22,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய படத்திற்கு 'மிஸ்டர். லோக்கல்' என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. இதை ராஜேஷ்.எம் இயக்கும் நிலையில், படத்தில் கதைத்தலைவியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

எஸ்.கே. 13 என்ற பெயரில் அடையாளப்படுத்தப் பட்டு வந்த இப்படத்திற்கு 'மிஸ்டர். லோக்கல்' என தலைப்பு தற்போது சூட்டப் பட்டுள்ளது.

தமிழில் சிவா மனசுல சக்தி படம் மூலம் இயக்குநராக கால்பதித்தவர் எம்.ராஜேஷ். இவரது இயக்கத்தில் வெளியான கடவுள் இருக்கான் குமாரு படம் வரவேற்பு பெற தவறியது. அதை தொடர்ந்து இரண்டு ஆண்டு இடைவேளைக்கு பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தை இயக்குவதாக அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில் இந்த படம் எஸ்.கே 13 என்ற பெயரில் அடையாளம் பெற்று வந்தது. 

இந்நிலையில் இந்தப் படத்தின் தலைப்பும், முதல் பார்வை சுவரொட்டியும் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. மிஸ்டர். லோக்கல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம், சிவகார்த்திகேயன் நடிக்கும் 13வது படமாகும். 

ஸ்டூடியோ க்ரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். சென்னையிலிருந்து பாரீசுக்கு செல்லும் கதைத்தலைவன், அங்கு சந்திக்கும் சம்பவங்களே படத்தின் கதை. 

எம். ராஜேஷ் படங்களுக்கே உரித்தான நகைச்சுவை, அதிரடி, காதல் உள்ளிட்ட அம்சங்களுடன், சிவகார்த்திக்கேயன் படங்களுக்கு ஏதுவான அம்சங்களும் 'மிஸ்டர். லோக்கல்' படத்தில் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போது விறுவிறுப்பாக நடைபெறும் இப்படத்தின் படப்பிடிப்பு, விரைவில் முடிவடையும் என தெரிகிறது. அனைத்து கட்ட வேலைகளும் நிறைவடைந்த பிறகு 'மிஸ்டர். லோக்கல்' படம் ஓரிரு மாதங்களில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,053.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.