Show all

கச்சத்தீவில் மீன்பிடிக்கும் பாரம்பரிய உரிமையை மீட்டுத் தர வலியுறுத்தி மீனவர்கள் வேலைநிறுத்

கச்சத்தீவில் மீன்பிடிக்கும் பாரம்பரிய உரிமையை மீட்டுத் தர வலியுறுத்தி இன்று 2 வது நாளாக ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கச்சத்தீவு உள்ளிட்ட பாக்நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்கும் பாரம்பரிய உரிமையை மீட்டுத்தர வேண்டும், இலங்கைச்சிறையிலுள்ள 16 மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.

இலங்கை கடற்படை பிடித்துவைத்துள்ள தமிழக மீனவர்களின் 32 படகுகளையும் விடுவிக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

இதனால் 1,200 படகுகள் கடலுக்குச் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ராமேஸ்வரம் மீன்பிடிதுறைமுகத்தில் 1200 படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் 5 கோடி வரையில் வாத்தகம் பாதிக்கப்பட்டள்ளது. 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.