Show all

படத்தின் வில்லனான ராகுல் தேவுக்;கு பிரியாணி விருந்து கொடுத்தார் அஜித்.

அஜித் தற்போது தல56 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தைச் சிறுத்தை சிவா இயக்கிவருகிறார். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹசான் நடித்து வருகிறார். மேலும், லட்சுமி மேனன் அஜித்திற்கு தங்கையாக நடித்து வருகிறார்.

இப்படத்தில் அஜித்துடன் இரண்டு வில்லன்கள் நடித்து வருகின்றனர். அதில் பாலிவுட்டை சேர்ந்த கபீர் சிங் இப்படத்தில் முதல் வில்லனாக நடிக்கிறார். இவர்கள் இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் படமாக்கினர் படக்குழுவினர்.

இதைத் தொடர்ந்து, இப்படத்தில் இரண்டாவது வில்லனாக சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘ஆதவன்’ படத்தில் வில்லனாக நடித்த ராகுல் தேவ் நடித்து வருகிறார். விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் ‘10 எண்றதுக்குள்ள’ படத்திலும் இவர் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சமீபத்தில் ‘10 எண்றதுக்குள்ள’ படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில், தற்போது அஜித் படத்தில் இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் அஜித் படமென்றாலே ரசிகர்கள் நினைவிற்கு வருவது அவர் பாசத்துடன் பரிமாறும் பிரியாணி தான். அதேபோல், இந்த படத்தின் வில்லனான ராகுல் தேவுக்கும் பிரியாணி விருந்து கொடுத்துள்ளார் அஜித்.

இதுகுறித்து ராகுல் தேவ் தல அஜித் மற்றும் சிறுத்தை சிவா குழுவுடன் இணைந்து வீட்டில் செய்த பிரியாணியுடன் ஜாலியாக சாப்பிட்டோம். அவர்களுடைய உபசரிப்பு மிகவும் நன்றாக இருந்தது என்று தெரிவித்துள்ளார் ராகுல் தேவ்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.