Show all

இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிறார்! சின்னத்தம்பி தொடரில், நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கும் பவானி ரெட்டி

05,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரபல தொடர் நடிகை பவானி ரெட்டி, தனது தாய் தந்தையரின் வற்புறுத்தலின் பேரில் இரண்டாவது திருமணத்திற்கு தயராகியுள்ளார்.

தெலுங்கு நடிகை ஆன பவானி சங்கர் தற்போது தமிழில் வரவேற்புள்ள தொடரான சின்னதம்பியில் நடித்து வருகிறார். இவர் கடந்த இரண்டு ஆண்;டுகளுக்கு முன்னர்  பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ஆனால் அவர்களது திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை. திருமணமான எட்டு மாதத்தில் பிரதீப் தற்கொலை செய்துகொண்டார். இதனால் இடிந்து போனார் பவானி ரெட்டி. நீண்ட நாட்களுக்குப் பின்னர் சின்னத்திரையில் நடிக்கத் தொடங்கினார். பெற்றோர் வற்புறுத்தலால் அவர் ஆனந்த் என்பவரை இரண்டாவது திருமணம் செய்யவிருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், எனக்கு இரண்டாவது திருமணத்தில் விருப்பமில்லை. எனது பெற்றோரின் விருப்பத்திற்காகவே திருமணம் செய்ய முடிவெடுத்தேன் என கூறினார். இவர்களது திருமணம் விரைவில் நடக்க இருக்கிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,065.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.