Show all

இசை வெளியீட்டு விழாவில் கண்ணீர் விட்டு அழுதார் பிரஜன்.

ஸ்ரீ கிருஷ்ணா  டாக்கீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் வி.எம்.பிரகாஷ் தயாரிக்கும் படம்

‘பழைய வண்ணாரப்பேட்டை’  

மோகன். ஜி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பிரஜன், ரிச்சர்ட், அஸ்மிதா, நிஷாந்த், கருணாஸ், ரோபோ சங்கர் ஆகியோர்  நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் பிரஜன் பேசியதாவது:

இந்தப் படம் வெற்றிப்படமாக வேண்டும் என்று நான் தினமும் சாமியைக் கும்பிடுகிறேன். இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வர இருந்த அனைவரிடமும் அவர்கள் சம்மதம் பெற்றபிறகுதான் அவர்களுடைய பெயர்களை அழைப்பிதழில் சேர்த்தோம்.

விழாவுக்கு வருகை தந்து வாழ்த்துமாறு கேட்டுக் கொண்டோம். ஆனால் யாரும் விழாவுக்கு வரவில்லை.

நான் நிறைய படங்கள் நடித்திருக்கிறேன் ஆனால் இந்தப் படம், என் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படம்.

உங்கள் பாராட்டு எங்களுக்கு வேண்டும் என்றுதான் அழைக்கிறோம் ஆனால் யாருமே வராதது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது என்று கண்ணீர் விட்டு அழுதார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.