Show all

காதலும் கடந்து போகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும்.

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி. குமாரும் மற்றும் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கீரின் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து சூதுகவ்வும் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் புதிய படம் ஒன்றை தயாரித்து வருகிறார்கள்.

விஜய்சேதுபதி கதாநாயகனாகவும் மடோனா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

காதலும் கடந்து போகும் என்று இப்படத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, லியோஜான் பால் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.