Show all

எல்கேஜி படம் வெளியானால் பாலாஜியின் படத்திற்கு செருப்பு அபிஷேகம் செய்யப்படும்! பிரவீன் குமார், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி

11,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: எல்கேஜி என்ற படம் தற்போது உருவாகி வருகிறது. இதன் விளம்பர ஒட்டி அண்மையில் வெளியானது இதற்கு அதிமுக கட்சியினர் பலத்த எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இப்படத்தில் அரசியலை கிண்டல் செய்து பெரும்பாலான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக பேச்சு எழுந்த நிலையில், இப்பட்டத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை இப்படக்குழு நேற்று அறிவித்தனர்.

இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நாஞ்சில் சம்பத் நடிக்கிறார். இந்நிலையில் 'தரமான சம்பவம்' என்று குறிப்பிட்டு ஆர்.கே.பாலாஜி இப்படத்தின் விளம்பர ஒட்டியை நேற்று வெளியிட்டார். இது எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரையும் நினைவுபடுத்துவதுபோல் இருந்ததால் அதிமுகவினர்  இந்த விளம்பர ஒட்டிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த பிரவீன் குமார் தன் கீச்சுப் பக்கத்தில், எல்கேஜி படம் வெளியானால்  பாலாஜியின் படத்திற்கு செருப்பு அபிஷேகம் செய்யப்படும் என்று தெரிவித்தார். 

இதற்கு பதிலளித்த ஆர்.கே.பாலாஜி இதுவரைக்கும் பண்ணாத மாதிரி அண்டா, அண்டாவா பண்ணி நம்ம மாஸ காமிங்க' என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கோபம் அடைந்த சிம்பு ரசிகர்கள் அதிமுகவினரை கிண்டல் செய்யுங்கள் தேவையில்லாமல் எங்கள் அண்ணன் சிம்புவை வம்புக்கு இழுக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,042.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.