Show all

தன்னுடைய அடுத்தப் படத்தில் நர்ஸ் வேடத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்

தன்னுடைய அடுத்தப் படத்தில் நர்ஸ் வேடத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

இந்தப் படத்தில் அவர் பலவேடங்களில் நடிக்கிறார். அதில் ஒன்றுதான் நர்ஸ் வேடம். ஒரு பாடலில் மட்டும் இதுபோல நடிக்கிறாரா அல்லது அந்த வேடத்தில் சில காட்சிகளும் உண்டா என்பது தெரியவில்லை என படக்குழுவினர் தகவல் தெரிவிக்கிறார்கள்.

சீன் ஃபுட் என்கிற சர்வதேச ஒப்பனைக் கலைஞர் இந்தப் படத்தில் பணிபுரிகிறார். அவதார், ஐ போன்ற படங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை பாக்கியராஜ் பாரதி இயக்குகிறார். கீர்த்தி சுரேஷ், கதாநாயகியாக நடிக்கிறார். ஆர்.டி. ராஜா தயாரிக்கும் இப்படத்துக்கு ஒளிப்பதிவு - பி.சி. ஸ்ரீராம், இசை - அனிருத்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.