Show all

தமிழ்ராக்கர்ஸ் திருடாத சாதனைப்படம் விரைவில் வெளியாக உள்ளது! காரணம்: சரவணாஸ்டோர்ஸ் உரிமையாளர் கதைத்தலைவன்

மக்கள் முகஞ்சுளிப்பதைக் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல், பிரபல கதைத்தலைவிகளோடு, பொம்மை மாதிரி, தங்கள் கடைக்கான விளம்பரப் படங்களில் நடித்து கடுப்படிப்பவர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர். அவர் படங்களில் நடிக்க இருக்கிறாராம்.
08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: திரைப்படங்களில் நடித்து விளம்பரங்களில் வாய்ப்பு பெறுவது நடிகர்களின் வழக்கம். ஆனால் தனது சொந்த கடைக்காக தானே விளம்பரங்களில் நடித்து பெயர் கெடுத்தவர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்.
துகிலியலைத் தொடர்ந்து பல்வேறு பொருட்களை விற்கும் கடையின் மூலம் பெரிய செல்வந்தராக உயர்ந்த பாரம்பரியத்தில் வந்தவர் இந்த நடப்பு சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்.
முன்னர் பெரிய, பெரிய நடிகர்களை வைத்து விளம்பரம் செய்துவந்த இவர், பின்னர் தானே களத்தில் இறங்கினார். பல்வேறு முன்னனி கதைத்தலைவிகளுடன் விளம்பரங்களில் நடித்து வருகின்றார்.
இவர் தற்போது திரைப்படங்களில் கதைத்தலைவனாக நடிக்க முடிவு செய்துள்ளார். இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, கதை கேட்கும் வேலையில் இறங்கி உள்ளார். அவருக்கு பிடிக்கும் கதையில் அடுத்த ஆண்டு நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
படம் வெளிவரும்போது, காசுகொடுத்து வாங்கி வெளியிடும் படங்கள் நடுவே, இது காசு வாங்கிக் கொண்டு வெளியிடும் படமாக அமையலாம். புதுப்படம் வெளியான அன்றே திருட்டு வெளியீடு செய்யும் தமிழ்ராக்கர்ஸ் இந்த படத்திற்கு விலக்கு அளிப்பார்கள் என்று நம்பலாம். என்ற நையாண்டிகள் இணையத்தில் வெளிவரத் தொடங்கிவிட்டன.
அரசியலில் தமிழிசை மாதிரி, திரைத்துறையில் நிரந்தரக் கலாய்ப்புக்கு கிடைத்து விட்டார் ஒரு ஆள் என்ற மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறார்கள் இணைய ஆர்வலர்கள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,129.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.