Show all

கீர்த்தி சுரேசுக்கு நயன்தாரா அசத்திய அந்த வேடமாம்! ராஜமௌலி இயக்கத்தில் புதிதாக வளரும் படத்திற்கு

20,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவில் மிக புகழ்பெற்ற இயக்குநராக வளர்ந்து விட்டார் ராஜமௌலி. அவர் தொட்டது எல்லாம் துலங்கி வருகிறது. கடைசியாக அவர் இயக்கிய பாகுபலி 2 உலகம் முழுக்க வசூலை வாரிக்குவித்தது.

இந்நிலையில் தற்போது ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், இளவல் இராமராவ் நடிப்பில் உருவாகி வரும் பிரமாண்ட படம் ராம ராவண ராஜ்ஜியம்.

இதன் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் ராம்சரண் ராமனாகவும், இளவல் இராமராவ் ராவணனாகவும் நடிக்கின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இப்படத்தை பற்றிய ஒரு சிறப்புத்தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தில் ராமனுக்கு கதைத் தலைவியாக சீதா வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாகவும், மற்றொரு முதன்மைப் கதாபாத்திரத்தில் பிரியாமணி நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,993.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.