Show all

நிலைமை அப்படி இருக்கிறது! மைத்திரி பால சிறிசேனா அதிபராக இருக்கும் வரை இலங்கையில் பிரச்சனை தீர வழியேயில்லை

17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை அதிபர் செயலகத்தில் நேற்றிரவு அதிபர் மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் சந்தித்தனர். அதேநேரம், இந்தச் சந்திப்பு எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்தது.

பாராளுமன்றத்திலுள்ள 225 பேரும் கையொப்பமிட்டு தம்மிடம் பரிந்துரைத்தாலும் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் தலைமை அமைச்சர் பதவிக்கு நியமிக்கப் போவதில்லை என அதிபர் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் இல்லாத திமுகவை. சீமான் இல்லாத நாம் தமிழர் கட்சியை, வைகோ இல்லாத மதிமுகவை யாராவது நிர்பந்தித்;தால் அவரைப் போகாத ஊருக்கு வழி சொல்வதாக சொல்வோம் அல்லவா? அப்படி போகாத ஊருக்கு எப்படியாவது வழி அமைத்து விட்டால் தனக்கு எதிராக இருக்கிற ஐக்கிய தேசிய முன்னணியை சிதைத்து விடலாம் என்ற உபாயத்தை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருக்கிறார் மைத்திரிபால சிறிசேனா.

ஐக்கிய தேசிய கட்சியில், யாராவது, சரி நாம் தலைமை அமைச்சர் ஆகப் போவதாக தெரிவித்தால். அதிபர் ஒப்புக் கொள்வார் என்று யாருக்காவது ஆசை வராதா என்று, ஏங்கிக் கொண்டிருக்கிறார் மைத்திரிபால சிறிசேனா. அப்படி ஐக்கிய தேசிய கட்சியில் யாரொருவர் முயன்றாலும், அடுத்த வினாடியே கட்சி உடைந்து விடும். உடனே ராஜபக்சேவை தலைமை அமைச்சராக நியமித்து விடலாம் என்று மந்திரித்து விட்டவர் போல சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார் மைத்திரி பால சிறிசேனா.

இந்த நிலையில் வேறு வழியே இல்லாமல், ஐக்கிய தேசிய கட்சியினர், மைத்திரி பாலாவையே நீக்குவது தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர். இதற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புதான் ஒத்;துழைத்தாக வேண்டும். 

இலங்கையில் தானாக பிரச்சனை தீருவதற்கு வழியேயில்லை. இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் மூல முதலாக இருக்கிற சீனாவுக்கு எதிர் நிலையில் இருக்கிற ஒரு நாடு நினைத்தால் மட்டுமே முடியும் போலிருக்கிறது. அந்த நாடு எந்த நாடோ? அந்த நாள் எந்த நாளோ!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்;டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,990.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.