Show all

கலப்பு இரட்டையர் பிரிவில் பயஸ் மற்றும் ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பயஸ்,சுவிட்சர்லாந்தின் ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.

இறுதி போட்டியில், அமெரிக்காவின் மாட்டிக் - கொரி இணையை எதிர்கொண்ட பயஸ் - ஹிங்கிஸ் இணை  6-4, 3-6, 10-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.

இதன் மூலம், 1969க்கு பிறகு ஒரே ஆண்டில் மூன்று சாம்பியன் பட்டங்களை வென்ற முதல் கலப்பு இரட்டையர் என்ற சாதனையை பயஸ் -ஹிங்கிஸ் இணை பெற்றுள்ளது.

மேலும், கலப்பு இரட்டையரில் 9 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற வரலாற்று சாதனையை லியாண்டர் பயஸ் படைத்துள்ளார்.

சாம்பியன் பட்டத்தை வென்ற பயஸ்ற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இது குறித்து டுவிட்டரில் கூறியதாவது:

பயஸ் மீண்டும் நன்றாக விளையாடி சாதனை படைத்துள்ளார்.சாதனை படைத்த பயஸ்சிற்கு வாழ்த்துக்கள். பயஸ் வெற்றி பெற்றது நமது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.