Show all

டெல்லியில் நிகழ்ச்சி நடத்த வருமாறு, குலாம் அலிக்கு, அரசு இன்று அழைப்பு.

சிவசேனாவின் கடும் எதிர்ப்பை அடுத்து மும்பையில் நடைபெறவிருந்த பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, தலைநகர் டெல்லியில் நிகழ்ச்சி நடத்த வருமாறு, குலாம் அலிக்கு அம்மாநில அரசு இன்று அழைப்பு விடுத்தது.

இந்நிலையில் குலாம் அலியின் நிகழ்ச்சி கொல்கத்தாவிலும் நடத்தப்படும் என்று மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 5 நாட்கள் அரசு முறை பயணமாக பூடான் சென்றுள்ள அவர் இந்தச் சம்பவம் குறித்து ட்விட்டர் இணையதளத்தில் இந்தத் தகவலைக் கூறியுள்ளார்.

அதில்,

இசைக்கு எல்லைகள் கிடையாது. இசை என்பது இதயத்தின் சந்தம். குலாம் அலியின் இசை நிகழ்ச்சி கொல்கத்தாவில் நடத்தப்படும். என்று தெரிவித்தார்.

அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

இந்திய எல்லைப்பகுதியில் அத்துமீறி தொடர் தாக்குதல்களைப் பாகிஸ்தான் நடத்தி வரும் நிலையில், தங்கள் பகுதியில் பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்க முடியாது என்று சிவசேனா கட்சி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.