Show all

அல்தாப்ஹூசைனுக்கு தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் 81 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது.

பாகிஸ்தான் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த குற்றத்திற்காக லண்டன்வாழ் பாகிஸ்தானியருக்கு அந்நாட்டு தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் 81 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட அல்தாப் ஹூசைன்  லண்டனில் வசித்து வருகிறார். அங்கிருந்த படியே அவர்   முத்திஹிடா உவாமி என்ற அமைப்பையும் அவர் நடத்தி வருகிறார்.

இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு பேசிய அல்தாப் ஜம்முவில் வசிக்கும் மக்களை இந்திய ராணுவம் எப்படி நடத்துகிறதோ,  அதுபோல கராச்சியில் வசிக்கும் மக்களும் பாகிஸ்தான் ராணுவத்தால் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.

அல்தாபின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அல்தாபுக்கு எதிராக தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் அல்தாப்புக்கு 81 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 2.4 மில்லியன் அபராதமும் விதிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அல்தாபை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் காவல்துறைக்கு பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.