Show all

இலங்கை இந்தியா விவகாரத்தில் சீனா முட்டுக்கட்டை போடுவது வழக்கமான ஒன்று

நடுவண் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கையில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் அந்த நாட்டின் அதிபர் சிறிசேனா, பிரதமர் ரனில் விக்ரம சிங்கே மற்றும் எதிர்க்கட்சத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.

 

இந்த நிலையில் 4 ஆப்பிரிக்க நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சீனா செல்லும் வழியில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, நேற்று திடீரென கொழும்பு வந்தார்.

 

சர்வதேச விமான நிலையத்துக்கு அவர் இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீராவை வரவழைத்து பேசினார். சில நிமிடங்களே நடந்த இந்தச் சந்திப்பின்போது, அவர்கள் என்ன பேசிக்கொண்டனர் என்பது வெளியிடப்படவில்லை.

 

இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் அனைத்து விதமான நடவடிக்கைகளிலும் சீனா முட்டுக்கட்டை போடுவது வழக்கமான ஒன்று என்ற நிலையில், சுஷ்மா சுவராஜ் கொழும்பு நகரில் இருந்தபோது, சீன மந்திரி அங்கு வந்து இலங்கை மந்திரியைச் சந்தித்து பேசியது கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.