Show all

எம்.பில்-இந்தி படிப்புக்கான பட்டம் வழங்கப்பட்டது.

பாகிஸ்தான் வரலாற்றில் முதன் முறையாக ஒரு பல்கலைக்கழகத்தில் எம்.பில்-இந்தி படிப்புக்கான பட்டம் வழங்கப்பட்டது.

நவீன மொழிகளுக்காக இராணுவத்தால் நடத்தப்படும் தேசிய பல்கலைக்கழகம் “ஸ்வதந்திரியோத்ர இந்தி உபன்யாசன் மெயின் நஸ்ரிசித்ரன்” என்ற தலைப்பில் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்த ஹாயின் ஜாபருக்கு இந்த பட்டம் வழங்கப்பட்டது.

இப்திகார் ஹுசைன் அரிப் கீழ் உள்ள உயர் கல்வி ஆணையத்தில் ஜாபர் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

பாகிஸ்தானில் இந்தி நிபுணர்களுக்கான பற்றாக்குறை அதிகம் நிலவி வருகின்றது. ஜாபர் வெளியிட்ட ஆய்வறிக்கையை, இந்தியாவில் உள்ள அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் உள்ள வெளிநாட்டு நிபுணர்கள் 2 பேர் இதை மதிப்பிடப்பட்டு எம்.பில் பட்டம் வழங்கப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.