Show all

ஈரானில் நீதிபதி ஒருவர் புதுமையான தண்டனை ஒன்றை வழங்கி வருகிறார்.

குற்றவாளிகள் மனம் திருந்தி புதிய வாழ்க்கையை வாழத் தொடங்கும் வகையில், ஈரானில் நீதிபதி ஒருவர் புதுமையான தண்டனை ஒன்றை வழங்கி வருகிறார்.

அதாவது, குற்றவாளிகள் தங்களது சிறைக் காலத்தில்  புத்தகங்களைப் படித்து, அது பற்றி குறிப்புகள் கொடுக்க வேண்டும் என்றும், அதனுடன், நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளில் அப்புத்தகத்தின் கருத்துக்கள் பொருந்தும் விஷயங்கள் பற்றி குறிப்பிட வேண்டும் என்றும் தண்டனையில் குறிப்பிடுகிறார்கள்.

இதனால், சிறையில் கைதிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது குறைவதாகவும், புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் ஏற்படுவதால், முதல் முறையாக குற்றச்செயலில் ஈடுபட்டு சிறைக்கு வருவோர் மனமாற்றம் பெறுவதாகவும் சிறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.