Show all

செயலலிதாவாக ரம்யா கிருஷ்னன், சசிகலாவாக விஜி சந்திரசேகர்! இணையத் தொடராக வருகிறது செயலலிதா வாழ்க்கைத் தொடர்

03,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறுகள் படமாகி வருகின்றன. அந்தவகையில் தமிழ் நாட்டின் முன்னாள் முதல்அமைச்சர் செயலலிதா, ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் ஆகியோரின் வாழ்க்கை படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.

செயலலிதா வாழ்க்கையைப் படமாக்க பெண் இயக்குனர் பிரியதர்சினி, லிங்குசாமி, பாரதிராஜா, விஜய் உள்ளிட்ட இயக்குநர்கள் போட்டி போடுகிறார்கள். இவர்கள் செயலலிதாவின் வாழ்க்கையை ஒரே நேரத்தில் இயக்கி வருகின்றனர்.

கவுதம் மேனன் செயலலிதா வாழ்க்கையை இணையத் தொடராக இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இதில் செயலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.

சசிகலாவாக நடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. சர்ச்சையான வேடம் என்பதால் இந்த வேடத்தில் நடிக்க நடிகைகள் யோசித்தனர். சசிகலாவாக விஜி சந்திரசேகர் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தில்லு முல்லு படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்த விஜி தற்போது குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார். இதில் வம்சி கிருஷ்ணா சோபன் பாபுவாகவும், இந்திரஜித் எம்.ஜி.ஆராகவும் நடிக்கின்றனர். இந்தப் படம் விரைவில் இணையதளத்தில் தொடராக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,064.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.