Show all

தெரியாதது இது! சின்மயி குறித்து எல்லோருக்கும் தெரிந்தது வேறு

01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பின்னணிப் பாடகி, பின்னணிக் குரல் கலைஞர் சின்மயி. அண்மையில் விஜய் சேதுபதி, திரிசா நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்த 96 படத்தில் திரிசாவுக்கு பின்னணிக் குரல் கொடுத்திருந்தார். படத்தில் கதைத் தலைவி பாடும் பாடல்களையும் இவரே பாடியிருந்தார். தமிழ்நாடு குரல் கலைஞர் சங்கத்தில்  உறுப்பினராக இருந்த தன்னை தற்போது யூனியனிலிருந்து நீக்கியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார் சின்மயி.

நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக குரல்கலைஞர் சங்கத்திற்கு சந்தா செலுத்தவில்லை என்கிற காரணத்திற்காக எனது உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கப்பட்டுள்ளேன். 

தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை குரல்கலைஞர் சங்கத்தில் உறுப்பினர் அல்லாத ஒருவர் எந்தப் படத்துக்கும் பின்னணி குரல்; கொடுக்க முடியாது. 

நான் பாக்கி வைத்துள்ள அந்தத் தொகையைக் கட்டினாலும், எனது உறுப்பினர் தகுதி திரும்பக் கிடைக்குமா எனத் தெரியவில்லை. 

தமிழில் 96 தான்  எனது கடைசிப் படமாக இருக்கப்போகிறது. குரல்சங்கத்தின் இந்த நீக்கம் தொடருமேயானால், ஒரு நல்ல படத்துடன் தமிழில் எனது பின்னணி பயணத்தை முடிப்பது மகிழ்ச்சியே. வருகிறேன் என்று  கூறியுள்ளார்.

அப்புறம் ஏம்மா உறுப்பினர் தொகை செலுத்த வில்லை? இரண்டு ஆண்டுகளாக என்னம்மா செய்து கொண்டிருந்தாய்? 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,974.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.