Show all

வருமான வரிச் சோதனை நடந்த நேரம் தான் கேள்வியெழுப்ப வைக்கிறது. சரத்குமார்:

விஜய் வீட்டில் நடந்த சோதனை குறித்து வருமான வரித்துறை விளக்கவேண்டும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.

நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா, திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, ‘புலி’ படத்தின் இயக்குநர் சிம்புதேவன் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் நேற்று சோதனை செய்தார்கள். இதனால் புலி படத்தின் சிறப்பு மற்றும் காலைக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

சரத்குமார்,

வருமான வரிச் சோதனை நடந்த நேரம் தான் கேள்வியெழுப்ப வைக்கிறது. படம் வெளிவருகிற நேரத்தில் அதனை அனுபவிக்காமல் இந்தச் சோதனையை புலி படக்குழுவினர் எதிர்கொண்டுள்ளார்கள். இதனால் விஜய் உள்ளிட்டவர்களின் வீடுகளில் நடைபெற்ற வருமான வரிச் சோதனை குறித்து வருமான வரித்துறை விளக்கவேண்டும் என்று கூறினார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.