Show all

இயங்கலை கருத்துக் கணிப்பில், 12 படங்களில் தேர்ச்சி பெற்றது ஒரேயொரு படம் மட்டுமே! பாவம் தமிழ்த் திரைப்படங்கள்

பனிரெண்டு படங்களைப் பட்டியல் இட்டுக் கொண்டு கருத்துக் கணிப்பில் ஈடுபட்ட இயங்கலை இதழின் கருத்துக் கணிப்பில் ஒற்றைப் படத்திற்கு மட்டும் தேர்ச்சி அளித்துள்ளனர் இயங்கலை வாக்காளர்கள்.

10,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடப்பு ஆண்டில் இதுவரை வெளியான தமிழ்ப் படங்களில், உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? என்று ஓர் இயங்கலை இதழ் கருத்துக் கணிப்பு நடத்தியிருந்தது.

அந்தக் கருத்துக் கணிப்பில் மக்கள் அளித்திருந்த விடை தமிழ்த் திரைப்படங்களின் நிலை கவலையளிப்பதாக உள்ளது.

தமிழ்த் திரையுலகை நம்பி ஆயிரக்கணக்கான கலைஞர்கள் முன்னெடுக்கும் முயற்சிக்கு இவ்வளவுதானா தமிழ் மக்கள் ஆதரவு என்று வருத்தமளிப்பதாகவே உள்ளது.

இதுவரை வெளியான தமிழ்ப் படங்களில், உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? என்ற கருத்துக் கணிப்பில் விசுவாசம் படம் மட்டுமே 67 விழுக்காட்டினர் விருப்பத்தில் தேர்ச்சி பெற்றிருக்கிறது.

பேட்ட படம் வெறுமனே 15 விழுக்காட்டினர் விருப்பத்தில் தேர்ச்சி இழந்திருக்கிறது. 

தடம் படம் அதனினும் குறைவாக 5 விழுக்காட்டினர் விருப்பத்தை மட்டுமே பெற்றிருக்கிறது.

பேரன்பு படம் அதனினும் குறைவாக 3 விழுக்காட்டினர் விருப்பத்தை மட்டுமே பெற்றிருக்கிறது.

சர்வம் தாளமயம், எல்கேஜி, ஆகிய படங்கள் அதனினும் குறைவாக 2 விழுக்காட்டினர் விருப்பத்தை மட்டுமே பெற்றிருக்கின்றன.

தில்லுக்கு துட்டு2, வந்தா ராஜாவாதான் வருவேன், டுலெட், கண்ணே கலைமானே, பூமராங் என்பன ஒற்றை மதிப்பெண் பெற்றுள்ளன.

தேவ் சுழியம் விருப்பத்தைப் பெற்றுள்ளது. ஓ! தமிழ்த் திரையலகமே தமிழகத்திற்கு ஐந்து முதல்வர்களைக் கொடுத்து எப்படியிருந்த நீ இப்படி ஆகி விட்டாயே!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,101.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.