Show all

பெரியமகன் ஹிந்து, இளையமகன் முசுலீம், மகள் கிறித்துவம் அப்பா எம்மதமும் சம்மதம்! சிம்பு, குறளரசன், இலக்கியா, இராஜேந்தர்

04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ் திரையுலகின் மூத்த இயக்குநரான டி.ராஜேந்திரன் இயக்கத்தில், நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய பல படங்கள் வெள்ளி விழா கண்டன. திரைப்பட இயக்கம் மட்டுமின்றி அத்துறை சார்ந்த பல தளங்களிலும் இயங்கும் பன்முகத்தன்மை கொண்டவராக டி. ராஜேந்திரன் இருந்து வருகிறார். 

இவருடைய மூத்த மகனான சிலம்பரசன் என்கிற சிம்பு தமிழ்த் திரையில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அவரும் திரைப்படங்கள் இயக்குவது, பாடல்கள் எழுதுவது, இசையமைப்பது பன்முகத்தன்மை கொண்டவராக இருக்கிறார். இவருடைய இளைய மகன் குறளரசன் குழந்தை மின்மினியாகப் பல படங்களில் நடித்துள்ளார். அண்மையில் சிம்பு, நயன்தாரா நடிப்பில் வெளியான 'இது நம்ம ஆளு' படத்திற்கு அவர் இசையமைத்திருந்தார். தொடர்ந்து பல திரைப்படங்களில் பணியாற்ற அவர் ஆயத்தமாகி வந்தார். இந்நிலையில் குறளரசன் இஸ்லாம் மதத்தை தழுவி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தந்தை டி. ராஜேந்திரன் மற்றும் தாய் உஷா முன்னிலையில் அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ள இயக்குநர் டி. ராஜேந்திரன், எம்மதமும் சம்மதம் மற்றும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை கடைப்பிடித்து வாழ்ந்து வருகிறேன். மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறியதில் மகிழ்ச்சி. சிம்பு சிவபக்தராக இருக்கிறார். மகள் இலக்கியா கிறிஸ்துவ மதத்தையும், இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்தையும் பின்பற்றுகின்றனர் என்று கூறினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,065.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.