Show all

ஹர்பஜன் சிங் திருமண நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் தாக்கப்பட்டனர்.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் திருமண நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடந்த கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் திருமண நிகழ்ச்சியைப் படம் பிடிக்க சென்ற செய்தியாளர்களைத் தாக்கிய அவர்களது பாதுகாவலர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்திற்கு செய்தியாளர்களிடம் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குக்கும், பாலிவுட் நடிகை கீதா பாஸ்ராவுக்கும் திருமணம் பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் வெகு விமர்சியாக நடைபெற்றது. இதையொட்டி, ஹர்பஜன் சிங்கின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை, படம் பிடித்துக் கொண்டிருந்த செய்தியாளர்கள் மீது பாதுகாவலர்கள் சிலர்; தாக்குதல் நடத்தியதாகவும், மேலும் படம் பிடித்துக்கொண்டு இருந்த கேமராக்களை அடித்து நொறுக்கியதாகவும் சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஹர்பஜன் சிங் வீட்டிற்கு வெளியே செய்தியாளர்கள் பாதுகாவலர்களைக் கைது செய்ய கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஹர்பஜன் சிங் விரைந்து வந்து செய்தியாளர்களைச் சமாதானப்படுத்தினார். பின்னர் நடந்த சம்பவத்துக்காக அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். இச்சம்பவம், குறித்து செய்தியாளர்கள் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து பாதுகாவலர்களான பாபுல், குல்தீப், ரவி, நவ்ஜோத் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.