Show all

தற்போது வம்பில் மாட்டிக் கொண்டிருக்கிறார் ஹன்சிகா! புகைப்பிடிப்புக்கு விளம்பரமளித்து சர்க்கார் படத்தில் விஜய் தொல்லை பட்டது போல

27,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த அறங்கூற்றுமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

ஹன்சிகா தற்போது மகா என்ற படத்தில், கதைத்தலைவிக்கு முதன்மை உள்ள வேடத்தில் நடிக்கிறார். யு.ஆர்.ஜமீல் இந்த படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். 

எக்ஸட்ரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் தயாரிக்கும் இந்தப் படத்தின் முதல் பார்வை விளம்பர ஒட்டி அண்மையில் வெளியானது. இதில் சாமியார் தோற்றத்தில் புகைப்பிடிப்பது போன்று ஹன்சிகாவின் தோற்றம் இடம்பெற்றிருந்தது.

தற்போது இந்த சுவரொட்டிக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. காவி உடை அணிந்து புகைப்பிடிக்கும் நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த அறங்கூற்றுமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள பட இருக்கிறது.

புகைப்பிடிப்புக்கு விளம்பரம் அளித்து,  சர்க்கார் படத்தில் விஜய் தொல்லை பட்டது போல,  புகைப்பிடிப்புக்கு விளம்பரம் அளித்து வம்பில் மாட்டிக் கொண்டிருக்;கிறார் ஹன்சிகா. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,000.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.