Show all

பருவம் மூன்றின் கதைத்தலைவன் கவின்தான்! பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழுவே அங்கீகரித்துள்ளது. ‘விளையாட்டு மாற்றி’ விருது வழங்கி

பிக்பாஸ் பருவம் மூன்றின் போக்கை முற்றாக மாற்றி விட்டார் கவின் என்பது, தற்போது தெளிவாகத் தெரிய வந்துள்ளது. பருவம் மூன்றின் கதைத்தலைவன் கவின்தான் என்று பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழுவே அங்கீகரித்துள்ளது. அதை ஒப்புக் கொள்ளும் முகமாகவே கவினுக்கு ‘விளையாட்டு மாற்றி’ என்று விருது வழங்கி பெருமைப் படுத்தியிருக்கிறது.

20,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிக்பாஸ் பருவம் மூன்று நிகழ்ச்சியில் ஒவ்வொரு முறையும் கவின் வெளியேற்றப் படலத்திற்கு வந்திருந்தார். ஆனால் காப்பாற்ற வாக்கு பட்டியலில் அவரே அதிக வாக்குகள் பெற்று முதன்மை இடத்தில் இருப்பார்.

போட்டியாளர்களிலேயே கவின் பட்டாளம் மிக மிகப் பெரிது. செரின் எல்லாம் ஒரு ஆளே இல்லை. ஆனால் கவினை ஒட்டிக் கொண்டு நின்றதால், செரின் விளையாட்டின் நிறைவுக் கட்டம் வரை மீட்கப் பட்டிருப்பது வியப்பே. பிக்பாஸ் பருவம் மூன்று போட்டியில் கவின் ஒரு நட்பு அணியை உருவாக்கி, தமிழக போட்டியாளர்களை யெல்லாம் அடித்துத் தூக்கினார் வனிதா உட்பட. பிக்பாசே திணறிப்போய் வனிதாவை மீண்டும் உள்ளே கொண்டு வந்தார். 

பிக்பாஸ் தலைப்பை லாஸ்லியா, தர்சன், முகென் ஆகிய மூவரில் ஒரு வெளிநாட்டுத் தமிழருக்கே பெற்றுத் தரவேண்டும் என்ற களம் அமைத்தார் கவின். தமிழ்நாட்டுப் போட்டியாளர்கள் மீது கவினுக்கு அத்தனை வெறுப்பு. அதுவும் தமிழச்சி என்று ஆடைஅடையாளத்தை முன்னெடுத்த மதுமிதாவை கருநாடகம்- தமிழகம் என்று பேசிய போது, லாஸ்லியாவின் துணையோடு, கடுமையாக சண்டை போட்டு செந்தூக்காக தூக்கினார் கவின்.

பிக்பாசே கையைப் பிசைந்து நின்ற நிலையில், பிக்பாசுக்கு கிடைத்த சிறந்த யோசனைதான் ஐந்து இலட்சம் கொடுத்து கவினையே தூக்குவது. கவினைத் தூக்கிய நிலையில், கவின் பட்டாளம், வெளியேற்ற படல மீட்பில், லாஸ்லியாவை முதன்மைப் படுத்த, சந்தடி சாக்கில் பிக்பாஸ், கவினின் வெற்றியாளர் பட்டியலில் இருந்த தர்சனைத் தூக்கி விட்டார். தர்சனைத் தூக்கியதால் அந்த இடத்திற்கு தனது சிஷ்யன் சாண்டியை பிக்பாசால் கொண்டு வர முடிந்தது.  

பிக்பாஸ் கவினைத் தூக்கினாலும், நிறைவுக் கட்டத்தில் இருந்தவர்கள்: கவின் பிக்பாஸ் தலைப்பிற்கு முன்னெடுத்திருந்த லாஸ்லியா, முகென் பிக்பாஸ் முன்னெடுத்திருந்த சாண்டி, ஒட்டிக் கொண்டு வந்த செரின். பிக்பாஸ் நிறைவு நிகழ்ச்சியில் இடம் பெற்றனர். 

கவினுக்கு விளையாட்டுமாற்றி  விருது வழங்கப்பட்டது. செரினுக்கு நட்பு விருது வழங்கப்பட்டது. வனிதாவிற்கு கெத்து விருது வழங்கப்பட்டது. சேரனுக்கு மிகவும் ஒழுக்கமானவருக்கான விருது வழங்கப்பட்டது. தர்சனுக்கு சகலகலா வல்லவன் விருது வழங்கப்பட்டு இருக்கிறது. 

பிக்பாஸ் பருவம் மூன்று நிகழ்ச்சிப் போட்டியில் வெற்றியாளராக முகேன் ராவ் அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டுள்ளது. மற்ற போட்டியாளர்களை விட இவர் அதிகமான வாக்குகளை பெற்று இவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி பெரிய வரவேற்பை பெற்றது. மூன்றாவது பருவம் தற்போது மிகவும் பெரிய அளவில் வரவேற்பை பெற்று, இலக்குத்தரமும் (TRP) எகிறி உள்ளது. மூன்றாவது பருவத்தில் கலந்து கொண்ட பலரும் தமிழகம் முழுக்க பிரபலமாகி உள்ளனர். மொத்தத்தில் கவினின் தந்திரமே (Strategy) பிக்பாஸ் பருவம் மூன்றின் நிகழ்ச்சியில் வாகை சூடியது என்றால் ஒரு போதும் மிகையாகாது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,298.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.