Show all

இரண்டு நிமிட காட்சிக்கு ரூ. 2 கோடி செலவில் தங்கமாய்த் தகதகக்கும் அரங்கம்! இந்தியன் 2 படத்திற்காக

28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகவுள்ள இந்தியன் 2 படத்தில் இடம்பெறும் 2 நிமிட காட்சிக்காக ரூ 2கோடியை செலவழிக்கவுள்ளனர் படக்குழுவினர்.

இந்தியாவின் மிகப் பிரம்மாண்ட இயக்குநர் என்ற பெயருக்கு உரியவர் சங்கர். இவர் இயக்கும் படங்களில் இடம்பெறும் பாடல்களின் அரங்குகள் அனைத்தும் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப் படும். அதற்காக அவர் கோடி கணக்கில் செலவு செய்வார். அடுத்து கமலை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார் சங்கர். படத்தின் கதைத்தலைவியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். '2.0' படம் முடிந்து வெளியானதை அடுத்து இயக்குனர் சங்கர், 'இந்தியன் 2' படத்தில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். 

முதல் கட்ட படப்பிடிப்பு நடத்துவதற்காக பிரம்மாண்ட அரங்குகள் போடப்பட்டு வருகின்றன. முழுமையாக தங்கம்போல் தகதகவென மின்னும் அரங்கு ஒன்று அமைக்கப்படுகிறது. இந்த அரங்கிற்காக மட்டுமே ரூ.2 கோடி செலவழித்துள்ளார்கள். ஆனால், இந்த அரங்கு பற்றிய காட்சி படத்திலும் 2 நிமிடம் மட்டுமே இடம்பெறுமாம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,001.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.