Show all

13வது சென்னை சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 6 முதல் 13 வரை நடைபெறுகிறது

13வது சென்னை சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 6 முதல் 13 வரை நடைபெறுகிறது. கடந்த 12 ஆண்டுகளாக சென்னையில் நடக்கும் முக்கிய திரை விழாவான இதில், திரை ஆர்வலர்கள், விமரிசகர்கள், திரைப்படக் கல்லூரி மாணவர்கள், திரைத் துறையினர், ரசிகர்கள் என பரவலாக பங்கேற்று வருகிறார்கள்.

பார்வையாளர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் படங்களான உலக அளவில் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இந்தியப் படங்கள் கோர்ட், பங்களாதேஷ் படம் ஜலாலல்ஸ் ஸ்டோரி திரையிடப்படுகிறது. 12 தமிழ்ப்படங்கள் (36 வயதினிலே, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது, கிருமி, கதிரவனின் கோடை மழை, மாயா, ஆரஞ்சு மிட்டாய், ஓட்டத்து தூதுவன் 1854, பிசாசு, ரேடியோ பெட்டி, சாரல்ஸ் ஷபீக் கார்த்திகா); திரையிடப்பட்டு இதில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படத்திற்கு விருது வழங்கப்படும். நாளை (6.01.2016) துவக்க விழாவினைத் தொடர்ந்து ஜெர்மனியப் படம் ’விக்டோரியா’ திரையிடப்படும்.

நாள் : 6.01.2016

திரையரங்கம் : உட்லாண்ட்ஸ்

நேரம் : மாலை 6.00

திரைப்படம் : விக்டோரியா

இரண்டு மணி நேரம் 20 நிமிடங்களுக்கு ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் இது. பெர்லினுக்கு குடி பெயரும் இளம் ஸ்பானிஷ் பெண், சோனே என்பவனை நண்பனாக்கிக் கொள்கிறாள். ஆனால் அவனுடன் வெளியே செல்லும் ஒரு இரவு அவளுக்கு ஆபத்தான ரகசியம் ஒன்றைத் தெரியப்படுத்தி அவளையும் அதில் சிக்க வைக்கிறது விதி. அதன் பின்னான சம்பவங்களைத் சுவார்ஸ்யமான திரை மொழியில் சொல்லியுள்ளார் இப்படத்தின் இயக்குநர் செபாஸ்டியன் ஸ்கிப்பர்.

சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட இப்படத்தில் அதிக வசனங்கள் ஆங்கிலத்தில் இருந்த ஒரே காரணத்தால் ஆஸ்கர் விருதை தவறவிட்டது. பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று மேம்பட்ட கலைநயம் மிக்க ஒளிப்பதிவுக்கான பிரிவில் வௌ;ளிக்கரடி விருது பெற்றது. சிறந்த படம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் ஜெர்மன் திரைபப்ட விருதுகளையும் பெற்றுள்ளது விக்டோரியா.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.