Show all

முதல்முறையாக சந்தோஷ் நாராயணனுடன் இணைகிறேன்: தனுஷ் ட்வீட்

தனுஷ் படங்களுக்குச் சமீபகாலமாக அனிருத்தான் இசையமைத்து வந்தார். தனுஷின் அடுத்தப் படமான கொடி படத்துக்கும் அனிருத்தான் இசை என்று சொல்லப்பட்டது. ஆனால் தற்போது அனிருத்துக்குப் பதிலாக சந்தோஷ் நாராயணன் கொடி படத்தின் இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று கொடி படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. முதல்முறையாக சந்தோஷ் நாராயணனுடன் இணைகிறேன் என்று தனுஷ் இதுகுறித்து ட்வீட் செய்துள்ளார்.

கொடி படத்தில் தனுஷ், த்ரிஷா, ஷாம்லி போன்றோர் நடிக்கிறார்கள். எதிர்நீச்சல், காக்கிசட்டை ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் இப்படத்தை இயக்குகிறார். இது அரசியல் கதை கொண்ட படம். இரட்டை வேடத்தில் நடிக்கிறார் தனுஷ்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.