Show all

மேதகு பிரபாகரன் அவர்களாக, பாபி சிம்கா நடிக்கும் சீறும்புலி படத்தின் முதல் பார்வை சுவரொட்டி! அவர்தம் பிறந்த நாளான இன்று வெளியாகியது.

10,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாபிசிம்கா நடிக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. 

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு 'சீறும் புலி' என்ற பெயரில் திரைப்படமாக தயாராகிறது. இந்தப் படத்தை ஸ்டுடியோ 18 நிறுவனம் சார்பிர் தயாரித்து இயக்குகிறார் வெங்கடேஷ் குமார். 

மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளையொட்டி சீறும் புலி படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகியுள்ளது. அதில் நடிகர் பாபிசிம்கா ஒரு புலியின் தலையில் கை வைத்தபடி, நாற்காலியில் அமர்ந்திருப்பது போல் உள்ளது. உலகத் தமிழர்கள் இந்த முதல் பார்வை சுவரொட்டியை வரவேற்றுள்ளனர். 

இலங்கையில் நடந்த நான்காவது தமிழீழப் போரில், மேதகு பிரபாகரன் அவர்கள், முல்லைத்தீவுப் பகுதியில் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. 

அவரது மூத்த மகன் சார்ல்ஸ் அன்டனி இலங்கை இராணுவத்தினரால் கொல்லப் பட்டார். பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படைத்துறையால் கொல்லப்பட்டதாகப் பின்னாளில் செய்திகளும், அவரது உடலின் ஒளிப்படமும் உலகம் முழுவதும் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது. மனைவி மதிவதனியின் நிலையும், மகள் துவாரகாவின் நிலையும் புரியப்படவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் 64வது பிறந்த நாள் இன்றாகும். வல்வெட்டித்துறையில் திருவேங்கடம் வேலுப்பிள்ளைக்கும், பார்வதி அம்மாளுக்கும் கடைசி மகனாகப் பிறந்தவர் பிரபாகரன்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் 64வது பிறந்தநாளை தமிழ் மக்கள் இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் மிக விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களும் யாழ் பல்கலைக்கழக வாளகத்தில், கொண்டாடியுள்ளனர்.

ராயபுரத்தில் தந்தை பெரியார் தி.க சார்பில், மேதகு பிரபாகரன் அவர்கள் பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. இதில் இயக்குநர் வ.கௌதமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பறை இசை முழக்கி பட்டாசு வெடித்து, விழா கொண்டாடப்பட்டது. பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பலத்த காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,983.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.