Show all

புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் ‘இறுதிச் சுற்று’ படத்தைக் காண விருப்பம்

மாதவன் நடித்து சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இறுதிச் சுற்று. இதில் குத்துச்சண்டைப் பயிற்சியாளராக நடித்துள்ளார் மாதவன். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படம், ஹிந்தியில் ‘சாலா காதூஸ்’ என்கிற பெயரிலும் வெளியாகியுள்ளது. சென்ற வாரம் வெளியான இறுதிச் சுற்று ரசிகர்களின் அமோக பாராட்டைப் பெற்றுள்ளது.

 

புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரரான மைக் டைசன், தன்னுடைய முகநூல் பக்கத்தில், இறுதிச் சுற்று படத்தின் விமரிசனத்தைப் பகிர்ந்து, இந்தக் குத்துச் சண்டைப் படத்தைக் காண விருப்பம் என்று எழுதியுள்ளார்.

 

இந்நிலையில், இறுதிச் சுற்று படத்தை இயக்குநர் ஷங்கர் பாராட்டியுள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது:

 

     இயக்குநர் சுதாவின் அருமையான முயற்சி. ரித்திகாவும் மாதவனும் பிரமாதமாக நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணனின் இசையும் அருமை என்று படத்தைப் பாராட்டியுள்ளார் ஷங்கர்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.