Show all

தி.மு.க., தேர்தல் விளம்பரங்களுக்கு, நடிகர் விஜய் எதிர்ப்பாக உள்ளது போன்ற கருத்து படங்கள்

தி.மு.க., தேர்தல் விளம்பரங்களுக்கு, நடிகர் விஜய் எதிர்ப்பாக உள்ளது போன்ற கருத்து படங்கள், சமூக வலைதளங்களில் வெளியிடப்படுவதால், பரபரப்பு எழுந்துள்ளது.

கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக, நடிகர் விஜய் மக்கள் நற்பணி இயக்கம் பணியாற்றியது. ஆனால், தேர்தலுக்கு பின், அ.தி.மு.க., தலைமை அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. ஆதரவளித்த விஜய், பிரசாரத்திற்கு வரவில்லை என்பது, அ.தி.மு.க., கோபத்திற்கு காரணம். வரும் சட்டசபை தேர்தலில், விஜய் ஆதரவை பெற, தி.மு.க., காய் நகர்த்தி வருகிறது. இதற்காக, விஜய் தந்தையிடம் இரண்டு கட்ட பேச்சு நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தி.மு.க., சார்பில், ‘என்னம்மா

இப்படி பண்றீங்களேம்மா’ என்ற விளம்பரங்கள் வெளியிடப்பட்டுவருகின்றன.

இந்த விளம்பரங்களை வைத்து, சமூக வலைதளங்களில், போட்டி பிரசாரம் செய்யப்படுகின்றன. அதில், தி.மு.க.,வின் தேர்தல் விளம்பரங்களுக்கு, விஜய் எதிராக உள்ளது போன்ற கருத்து பரப்பப்படுகிறது. சமூக வலைதளங்களில், நேற்று வெளியான இதுபோன்ற ஒரு விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகம் 2.47 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருக்கும் நிலையில், ஆட்சியை பிடிப்பதற்கு, எதற்காக கோடி கோடியாக செலவு செய்து, விளம்பரம் செய்ய வேண்டும்; இவர்கள் தான் நல்லது செய்வார்களா? கொள்ளை அடிக்க போடும் முதலீடு தான் இது.

இனிமேலாவது, சுயமா யோசித்து ஓட்டு போட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. விஜய் பேட்டி அளிப்பது போன்ற படமும், இத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது. விஜய்க்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில், இதுபோன்ற கருத்துகள் வெளியிடப்பட்டு வருவதாக, அவரது தரப்பினர் கூறுகின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.