Show all

ராகுல் காந்தியைச் சுட்டுக் கொல்ல வேண்டும் அல்லது தூக்கில் தொங்க விட வேண்டும் என்று பாஜக நாடா

ராகுல் காந்தியைச் சுட்டுக் கொல்ல வேண்டும் அல்லது தூக்கில் தொங்க விட வேண்டும் என்று ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கைலாஷ் சவுத்ரி கூறியுள்ளார்.

இந்தியத் தலைநகர் டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பின் தலைவர் கண்ணையா குமார் மீது தேசத்துரோக குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்திய நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முகமது அப்ஸல் குரு 2013ஆம் ஆண்டில் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து பேரணி நடத்தியதற்காக கண்ணைய்யா கைது செய்யப்பட்டார். இந்தப் பேரணியில் இந்தியாவுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

தில்லியில் உள்ள பாடியாலா நீதிமன்ற வளாகத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் தலைவர் கண்ணைய்யா மீதான தேசத் துரோக வழக்கு விசாரணைக்காக வந்தபோது, வழக்கறிஞர்கள் சிலர் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் கண்ணையா நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக, ஃபர்ஸ்போஸ்ட் இணையதளத்தைச் சேர்ந்த தாரிக் அன்வர் நீதிமன்றத்திற்கு வெளியில் தாக்கப்பட்டார்.

இதனையடுத்து, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தாக்கப்பட்ட கன்னையா குமாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தாக்குதலைக் கண்டித்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்திலும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார்.

 

இந்நிலையில், ராஜஸ்தானைச் சேர்ந்த கைலாஷ் சவுத்ரி என்ற பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகையில், ‘ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நாட்டுக்குத் துரோகம் இழைத்து விட்டார்.

 

அவர் ஒரு தேசத் துரோகி; அவரை சுட்டுக் கொல்ல வேண்டும் அல்லது தூக்கில் தொங்க விட வேண்டும்’ என்று பேசியுள்ளார்.

 

கைலாஷ் சவுத்ரி, ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டம், பேடூ என்ற தொகுதியிலிருந்து சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.