Show all

இந்தியர் ஒவ்வொருவரும் வெட்கி தலைகுனிய வேண்டிய ஆய்வுத் தகவல்

நவீன அடிமைப் பட்டியலில் உலக அளவில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த மனித உரிமை அமைப்பான ‘வாக் ப்ரீ பவுண்டேஷன்’

என்ற நிறுவனம் சர்வதேச அளவில் நவீன அடிமைகள் குறித்த இந்த ஆண்டிற்கான ஆய்வறிக்கையை குலோபல் ஸ்லேவரி இண்டெக்ஸ் என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.

குலோபல் ஸ்லேவரி இண்டெக்ஸ்,

உலக அளவில் 4.6 கோடி பேர் நவீன அடிமைகளாக இருப்பதாகவும், அந்த எண்ணிக்கையில் 1.83 கோடி பேருடன் இந்தியா முதலிடத்தில் உள்ளதாகவும் ஆய்வுத் தகவல் வெளியிட்டுள்ளது.

அதேநேரத்தில் நாட்டின் மக்கள் தொகையுடன் கணக்கிடும்போது, விழுக்காட்டு அடிப்படையிலான நாடுகள் பட்டியலில் வடகொரியா முதலிடத்தில் உள்ளது. பாலியல் தொழில், பிச்சை எடுத்தல் ஆகியவற்றில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுபவர்கள், கொத்தடிமைத் தொழிலாளர்களே எனக் குறிப்பிடப்படுகின்றனர்.

இந்த பவுண்டேசன் தலைவர் ஆண்ட்ரூ பாரஸ்ட் இதுகுறித்து கூறியதாவது:

அடிமைத்தனத்தை ஒழிக்க கடுமையான சட்டத்தை இயற்ற உலக நாடுகள் முன்வர வேண்டும்.

அடிமைகள் அதிகம் இருக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருந்தாலும், அடிமைத்தனத்தை ஒழிக்க இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.