Show all

தலைவா... உங்களுடைய ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்: ஷாருக் கான்

ஷாருக் கான் நடித்துள்ள ஃபேன் படத்தின், ஃபேன் ஆந்தம்  என்கிற பாடல் தற்போது பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

 

ரசிகர் ஒருவர் தனக்குப் பிடித்த நடிகரை எண்ணிப் பாடுவது போல இந்தப் பாடல் அமைந்துள்ளது. தமிழ், பெங்காலி, போஜ்புரி, குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி ஆகிய மொழிகளில் இந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்ப் பாடலுக்கான இணைப்பை தனது சுட்டுரை பக்கத்தில் பகிர்ந்தபோது ரஜினியைக் குறிப்பிட்டு பதிவு செய்தார் ஷாருக்கான்.

 

ரஜினி சார், நான் ஒரு சினிமா நட்சத்திரம் அல்ல. உங்களின் எண்ணிலடங்கா ரசிகர்களில் ஒருவன். தலைவா... உங்களுடைய ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.

 

ஃபேன், ஏப்ரல் 15-ம் தேதி வெளியாக உள்ளது.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.