Show all

தேமுதிக104 மதிமுக29 தமாகா26 விசிக25, இ.கம்யூ25, மா.கம்யூ25 தொகுதிகள்

தேமுதிக104, மதிமுக29, தமாகா26, விசிக25, இ.கம்யூ25, மா.கம்யூ25 தொகுதிகளில் போட்டி!

தேமுதிக- மக்கள் நலக்கூட்டணி- தமாகா கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மக்கள் நலக்கூட்டணியில் ஏற்கனவே தேமுதிக இணைந்துள்ள நிலையில்,  இன்று தமாகா தலைவர் ஜி.கே.வாசனை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்களான வைகோ, தொல்.திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்தது.

 

     இதைத் தொடர்ந்து மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுடன் தமாகா தலைவர் ஜி.கே.வாசன்,  சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைவர் அலுவலகத்திற்கு வந்தார். அவரை தேமுதிக இளைஞரணி தலைவர் சுதீஷ் வரவேற்றார். பின்னர், விஜயகாந்தை அவர்கள் சந்தித்து பேசினர். இதையடுத்து, கட்சிகளுக்குள் தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டில் விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள், ஜி.கே.வாசன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

 

 

 

அதில், தேமுதிக 104 தொகுதிகளிலும், மதிமுக 29 தொகுதிகளிலும், தமாகா 26 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் 25 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் 25 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 25 தொகுதிகளிலும் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.